பாலைவனத்தை சோலைவனமாய்
paalaivanathai solaivanamaay
பாலைவனத்தை சோலைவனமாய் மாற்றிடுவார் நம் தேவன் - ( 2) எதற்கும் பயம் இல்லை கலக்கும் நமக்கில்லை -2 கரம் பிடித்து நடத்திடுவார்
1. தண்ணீர்கள் கடக்கும் போது அவர் உன்னோடு இருப்பாரே நீ ஆறுகளை கடக்கும் போது அவைகள் புறளாதே -(2) அக்கினியில் நடக்கும் போது ஜுவாலை பற்றாதே -(2)
2. தாகம் உள்ளவன் மேலே தண்ணீரை ஊற்றுவார் வறண்ட நிலத்தின் மேலே ஆறுகளை ஊற்றுவார் -(2) சந்ததியின் மேல என்றும் தன் ஆவியை ஊற்றுவார் -2
3. நொறுங்குண்ட உந்தன் மனதில் காயங்கள் ஆற்றூவார் சிறைப்பட்ட உந்தன் வாழ்வை விடுதலை ஆக்குவார் -(2) உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் வாய்காதே -2