பாலைவனமாய் மாறிப்போன
paalaivanamaay maarippona
பாலைவனமாய் மாறிப்போன மானிட இதயங்களில் பாசம் வீசும் சுவிசேஷ பூக்கள் பூத்திர செய்வோமே -2
தரிசனம் நிறைந்தோரே வாருங்களேன் இரட்சிப்பு விதைகளை தூவுங்கள் வனாந்திரம் வரண்ட நிலம் செழித்து மகிழட்டுமே -2
1. சாரன் ரோஜா மலரட்டும் லீபோனின் மகிமை தோன்றட்டும் கர்த்தரின் மகத்துவம் கண்டு ஆனந்த பாடல் முழங்கட்டுமே -2 பாடல் முழங்கட்டுமே-2
2. குருடரின் கண்கள் திறக்கட்டும் முடவன் மானைப்போல் குதிக்கட்டும் ஆறு அருவி ஓடை ஊற்றுகள் பாய்ந்து ஓடட்டுமே -2 பாய்ந்து ஓடட்டுமே-2
3. மீட்கப்பட்டோர் பாடட்டும் சீயோனை நோக்கி திரும்பட்டும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போகும் சந்தோஷம் நிலைத்திருமே -2 சந்தோஷம் நிலைத்திருமே-2