பாலகன் போல் தன்னை
paalagan pol thannai
பாலகன் போல் தன்னை தாழ்த்தி டுவது யார்?-சிறு
பார்தனில் தன்னை மறந்தவன், மாட்சியில் உத்தமன் அவன்.
1. தந்திடும் தாசனுக்கும் தாழ்மை இச்சணமே வந்திடும், எந்தனைக் கேளும், கண்டிடும் குறைகள் தீரும்
2. கொந்தளிப்பாகும் வேளை சொரிந்திடும் கிருபை உந்தன் ஒத்தாசை ஈந்து உள்ளத்தில் ஊற்றும் தாழ்மை
3. பாதகர் பகடி செய்து மெளனம் ஆனவா நாதா! உம் வழியில் நடக்க நாள்தோறும் கருணை தாரும்
4. தாழ்மையில் நிதி உம்மைக் கடந்து போனதே தாழ்மையில் அமிழ்ந்து நிற்கத் தாகிக்கு தென் முழு உள்ளமே
5. ஆவியில் எளிமை உள்ளவன் இராச்சியம் அடைவான். தாவி உம் பாதம் அடைந்தேன், ஆவியால் நடத்திக் கரும்