பாக்கியமே பெரும்
paakkiyamae perum
1. பாக்கியமே பெரும் சிலாக்கியமே யிது ஊக்கமாய் ஊழியம் செய்திடுவோம் நோக்கி செல்வோம் நித்தமும் இயேசுவை வாக்கவர் ஈந்தனரே
2. நாடும், நகரமும், வீடும், கலை, செல்வம், தாயும், தந்தையும், சகோதரரும் உன்ன தனுக்காய் வெறுத்தவர் மாத்திரம் உண்மை அப்போஸ்தலரே - பாக்
3. நரிகளுக்கும் பறவைகளுக்குமோர் தங்கி தாபரிக்கத் தலமுண்டே தலை சாய்த்திடவும் நாதன் இயேசுவுக்கோ தலமில்லை பூவிலே - பாக்
4. கஷ்டமோ நஷ்டமோ நிந்தைகளோ நிதம் துஷ்டர்கள் நேரும் கொடும் விபத்து பஞ்சம் பசி தாகம் எது அடைந்தாலும் சஞ்சலம் நாம் அடையும் - பாக்
5. நானெங்கிருப்பேனோ அங்கிருப்பாரவர் நானிலத்தில் எந்தன் சேவை செய்தவர் நான் வரும் நாளில் அவர்க்குப் பிரதிபலன் நல்குவேன் என்றனரே - பாக்