பாடுவேனே வாழ்விலே என்
paaduvenae vaazhvilae en
பாடுவேனே வாழ்விலே என் ஆசை நேசரைக் கண்டேனே
சுந்தர மைந்தன் (இயேசு) கிறிஸ்து என்ற நாமமே நிந்தை கோலம் பூண்ட பாலன் வேந்தன் இயேசுவே
எல்லையில்லாக் கிருபை நிறைந்த ஜீவ ஊற்றாமே அல்லல் தீர்க்கும் அன்பின் ஊற்றே (வள்ளல்) எல்லா நாளுமே
இவ்வுலகில் உள்ள பொருள் யாவும் நீங்குமே எந்தன் ஆசை உந்தன் வீடே என்றும் வாழ்வேனே
துன்பம் துக்கம் தொல்லை யாவும் என்னை மூடினும் அன்பரென்னை இன்ப வீட்டில் கொண்டு சேர்ப்பாரே
என்னை ஆண்டநேசத்துக்கு என்ன ஈடுண்டோ என்ன செய்வேன் ஒன்றுமில்லை என்னையே தந்தேன.
கடைசிமட்டும் இருப்பேன் உன்னோ டென்றுரைத்தாரே இடைவிடாமல் அவரிலே நான் நிலைத்து வாழ்வேனே
ஆனந்த மிகுந்திடுதே அன்பர் சமுகமே ஆசை அவரில் ஊற்றியே நான் அகமகிழ்வேனே
எக்காளம் தொனித்திடவே காலமாயிற்றே மேக மீதில் ஜீவநாதன் வேகம் வாறாரே