பாடுவேன் கொண்டாடுவேன்
paaduven kondaaduven
பாடுவேன் கொண்டாடுவேன் இயேசு பிறந்தார் என் வாழ்விலே என் பாவங்கள் போக்கிடவே என் வாழ்வினை மாற்றிடவே
நன்றி நன்றி நன்றி நன்றி இயேசுவே நன்றி -2
விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் என்னை சொந்தமாக்க சொந்த இரத்தம் சிந்தி சென்றீர் என்னை மீட்டெடுக்க
நீர் அதிசயமானவரே ஆலோசனை கர்த்தரே சமாதான பிரபுவே இம்மாணுவேலரே - நன்றி
அன்பே அழகே என் இயேசுவே எந்தன் உயிர் மூச்சே என்னில் வாழ சித்தம் வைத்து பரிசுத்த ஆவியை தந்தீரே
என்னை தேடி வந்தவரே என்னை தெரிந்து கொண்டவரே தாயை போல அணைத்தவரே தந்தை போல தேற்றினீரே
என்னில் என்ன கண்டீரையா உந்தன் ஜீவனை தந்திடவே பாவி என்மேல் எவ்வளவன்பு சொல்லி முடியாதே
உந்தன் அன்பின் அகலம் ஆழம் நீளம் உயரம் அளக்க முடியாதே அன்பின் உருவாய் வந்தீரே அன்பின் இயேசுவே - நன்றி