பாடு பாடு புது ராகம் பாடு
paadu paadu pudhu raagam paadu
பாடு பாடு புது ராகம் பாடு பாலன் ஏசுவை பாடு வானும் பூமியும் வாழ்த்திபாட தாளத்தோடு மகிழ்ந்தாடு கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் ஒ கிறிஸ்மஸ் மேரி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ்-2
1. விண்ணில் மகிமை தோன்றிடவே மண்ணில் மீட்பு வந்திடவே விண்ணவர் மனிதனாய் மண்ணில் இன்று தோன்றினார் -2 பரலோக ராஜன் புவி காண வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம்
2. சாத்தான் சேனனை வீழ்திடவே சர்ப்பத்தின் சாபம் நீக்கிடவே சாவான லோகத்தில் சர்வவல்லவர் தோன்றினாரே -2 தேவாதி தேவன் மனுவாக வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம்
3. சமாதானம் எங்கு நிலை விடவே சந்தோசம் என்றும் நிலைத்திடவே சாந்தமாய் நேசமாய் பரிசுத்தர் இன்று தோன்றினாரே -2 சமாதான பிரபு சிசுவாக வந்தார் அதிசயம் அதிசயம் சொல்ல முடியாத அதிசயம் அதிசயம்