பாடியே பரனை துதி
paadiyae paranai thudhi
பாடியே பரனை துதி மனமே - துதி மனமே கொண்டாடி துதி தினமே
1. சென்ற நாளெல்லாம் கருத்துடன் காத்து நாதனைத் துதி மனமே நாளுக்கு நாள் செய் பல நன்மைக்காய் நாதனைத் துதி மனமே ஆதரவாய் எம்மைக் காத்ததினாலே தேவனை துதி மனமே - பாடி
2. நானிலந்தனிலெம் பாவங்கள் போக்கிய நாதனைத் துதி மனமே என்றும் என் மேல் வைத்த மாறிடா அன்புக்காக நாதனைத் துதி மனமே கானகமதிலே ஜீவ ஊற்று தேவனை துதி மனமே - பாடி
3. கிருபையாய் ஈந்த திருப்பலிக்கான நாதனைத் துதி மனமே கோரமாய் வந்த நோய்களைத் தீர்த்ததால் நாதனைத் துதி மனமே தாபரமாய் எம்மைத் தாங்கியதாலே தேவனை துதி மனமே - பாடி
4. கஷ்டமானாலும் நஷ்டமானாலும் நாதனைத் துதி மனமே பஞ்சம் பசியுடன் பக்கம் வந்தாலும் நாதனைத் துதி மனமே ஜீவனானாலும் மரணமாலும் தேவனை துதி மனமே - பாடி
5. ஏகமாய் எம்மை அன்பினால் இணைத்த நாதனைத் துதி மனமே அகமதை ஆவியால் ஆலயமாக்கிய நாதனைத் துதி மனமே தூதரிலும் எமை மேன்மையாக எண்ணிய தேவனை துதி மனமே - பாடி
6. உன்னத அழைப்பில் எம்மையே தெரிந்த நாதனைத் துதி மனமே பெலமுள்ள கரமதில் செங்கோலுமாக்கிய நாதனைத் துதி மனமே நீடூழி காலம் சாலேமில் வாழ்த்திட தேவனை துதி மனமே - பாடி