பாடிடுவோம் ஒன்றாய்
paadiduvom ondraay
பாடிடுவோம் ஒன்றாய்க் கூடிடுவோம் பரணி பாதம் பணிந்து கனிவுடன்
1. புண்ணியர் மிகப் புதுமையுடன் புகலவொண்ணா இரட்சை தந்தார் போற்றி யேற்றி வாழ்த்திடுவோம் புனிதனை நாம் பூவினிலே - பாடி
2. பக்தர்கள் நாம் ஆவதற்கு பரண் தாம் சிலுவை சுமந்தார் சுந்தர் நாம் சோபித்திலங்க சுத்த ஆவி ஈந்ததாலே - பாடி
3. நிந்தை சோதனை அவமானங்கள் நேரினும் நாம் சூரா தேட நேயன் தாமே நிந்தை சுமந்தார் நேயரே நாம் ஆனந்தமாய் -- பாடி
4. மாய உலகம் வாழ்வை வெறுத்து மாசற்றோராய் ஜீவிப்போர்க்கு மகிமையான சொர்ண வீட்டை மகிபன் இயேசு ஈந்திடுவார் - பாடி