பாதை தெரியா ஆடு போல
paadhai theriyaa aadu pola
பாதை தெரியா ஆடு போல பேதையாக நானிருந்தேன் நல்ல மேய்ப்பன் தேடி வந்தீர் பிள்ளையாக மாற்றிவிட்டீர் நன்மைகள் பலவும் செய்பவரே நன்றியோடு நான் பாடுவேன் துன்பங்கள் என்னை சூழ்கையிலே துணையாய் வந்து காப்பவரே .
1. வாழ்க்கை என்னும் படகிலே நான் வழி தெரியாமல் தவிக்கையிலே உம் அன்பால் என்னையும் அணைத்தீர் என் படகோட்டியாய் நீர் வந்தீர் உந்தன் அன்பு மாறாததே உந்தன் அன்பு குறையாததே .
2.வேதனையான நேரத்திலே என் வேந்தன் உம்மை நான் தேடினேன் வேதனையில்லா நேரமெல்லாம் என் வேந்தன் உம்மை நான் தொலைத்தேன் இந்த பாவியையா நீர் தேடினீர் உம் பாசத்தாலே என்னை மூடினீர் .