பாதை ஒன்று இதுவேதான்
paadhai ondru idhuvedhaan
பாதை ஒன்று இதுவேதான் செல்லும் வீரர் யாருண்டு சேதமின்றி நடத்துவார் சேனைகளின் கர்த்தரே அல்லேலூயா அன்பின் ராஜா முன்னே செல்ல பின்னே செல்வோம்
இஸ்ரவேலை நேசிப்பவர் ஈனக் கோலம் எடுத்தவர் அன்பின் கிரீடம் அளிக்கின்றார் ஆயத்தம் நீ தயங்காதே
மோட்சமோ நல் பேரின்பமே வழியோ சற்று நெருக்கமே பொற்தள வீதி சென்ற வரை போற்றுவேனே என்றென்றுமே
அல்லேலூயா பாடிடுவேன் அங்கு கவலை இல்லையே உயர்வு தாழ்வு இனமில்லை உன்னதரின் ஆட்சியிலே