பாதகரின் பாவம் போக்கிடவோ
paadhagarin paavam pokkidavo
1. பாதகரின் பாவம் போக்கிடவோ பாதகக் குருசைச் சுமந்தனரே பாதகர் நம்மை பாவனராக்க பாரக்குருசில் தொங்குகிறார்
வருவாய் இந்நேரம் சிலுவையின்இடை தருவாய் என்னிதயம் அவரிடமே தருவார் உனக்குச் சமாதானம்
2. உன் மீறுதலுக்காய் நொறுக்கப்பட்ட உன் பாவங்களுக்காய் காயப்பட்டார் சமாதான சிட்சை தன் மீதில்கொண்டே சமாதானகாரணர் தொங்குகிறார் - வருவாய்
3. முள்ளின் முடியும் சூடினோராய் கள்ளர் நடுவில் துடித்தவராய் மடிந்திடும் உனக்கு மகுடம் சூட விடுவிப்பாரின்றி தொங்குகிறார் - வருவாய்
4. சிந்திய உதிரம் உந்தனுக்கு சிந்தை செய்யாயோ இட்சணமே சுந்தர மைந்தன் விரும்புவாரின்றி அந்தரமீதில் தொங்குகிறார் - வருவாய்
5. நித்தியமாய் உன்னைக் கொண்டிடவே நித்திய ஜீவனும் தந்திடவே தற்பரன் உனக்கு விடுத்திடும் அழைப்பை தள்ளிடாதே இன்றே பெற்றிடுவாய். - வருவாய்