பாதகனாய் நானலைந்தேன்
paadhaganaay naanalaindhen
பாதகனாய் நானலைந்தேன் பாவி யென் றுணராதிருந்தேன் தத்தளிக்கும் ஏழை வந்தேன் சத்தியரே யாவும் தந்தேன்
மன்னா உந்தன் விண்ணை விட்டு மண்ணில் வந்து பாடுபட்டு மரித்த தயக்கம் பண்ணப்பட்டு உயிர்த் தெழுந்தீர் என்னைவிட்டு
உந்தன் பாடு கஸ்தி யாலாம் வந்த தெந்தன் பாக்ய மெல்லாம் இம்மை செல்வம் அற்பப் புல்லாம் உம்மைப் பெற விட்டேனெல்லாம்
இயேசுவுக்கு முள்ளால் முடி அரசன் கால் நாணல் தடி நீர் குடிக்க கேட்டா லோடி ஓர் பாதகன் தந்தான் காடி
கெத்சமனே தோட்டத்திலே கத்தி பட்ட என் அண்ணலே அந்த ஆவி உள்ளத்திலே வந்தால் வெல்வேன் யுத்தத்திலே