பாடல்களால் உம்மை நான் துதிக்க
paadalgalaal ummai naan thudhikka
பாடல்களால் உம்மை நான் துதிக்க கிருபை தர வேண்டுமே இசையோடு உம்மை நான் பாட பாடல் தரவேண்டுமே
அசைவும் நீரே ஆதாரம் நீரே இயேசைய்யா இன்பமும் இசையும் என் ஈர்ப்பும் நீரே இயேசைய்யா
உம்மையன்றி வேறொரு தெய்வம் இல்லை கண்டு கொண்டேன்
உயர்வும் நீரே ஊக்கமும் நீரே இயேசைய்யா எண்ணமும் நீரே ஏக்கமும் நீரே இயேசைய்யா
ஐஸ்வர்யம் நீரே ஒருவராம் தெய்வமே இயேசைய்யா ஓய்வின்றி துதிக்க தகுந்த்வர் நீரே இயேசைய்யா
எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா ஒளஷதம் நீரே எனக்கெல்லாம் நீரே இயேசைய்யா