பாடாத பாடலொன்று
paadaadha paadalondru
பாடாத பாடலொன்று பாடவா மீட்டாத வீணை மீட்டவா ஆடாத நடனம் ஒன்று ஆடவா மனதில் ஆருயிரே உம்மை நானும் போற்றி பாடவா
அவர் பாவம் போக்க பிறந்தார் இன்ப பாடுகளை சகித்ததால் பாவியான நம்மை மீட்க தன்னை பலியாக்கினார்
வானதூதர்களே வாழ்த்தி பாடுங்கள் பூமி மாந்தர்களே வணங்கிப் போற்றுங்கள் கன்னியிடம் பிறந்த பாலனை தேடுங்கள் காலமெல்லாம் அவரை கருத்துடன் பாடுங்கள்
உலகமெல்லாம் போற்றிடும் தூயன் நீரே வழிகாட்டி நடந்திடும் நட்சத்திரம் நீரே உலகிற்கு ஒளியாய் வந்த உன்னதர் ஏசுவே மாந்தரே பாடுங்கள் உண்மையை தூய இருதயத்துடன் என்றுமே