பாபிலோன் ஆறுகள் அருகே
paabilon aarugal arugae
பாபிலோன் ஆறுகள் அருகே அமர்ந்தோம் -2 சீயோனை நினைத்து அழுதோம் -2 பாபிலோன் ஆறுகள் அருகே அமர்ந்தோம்
பலறி செடிகளில் கிண்ணரத்தை தூக்கி வைத்தோம் அலறிப் புலம்பி எங்கள் துன்பத்தையே ஏற்றி வைத்தோம் எங்களை சிறைபிடித்த மனிதரும் பாடச் சொன்னார் (அந்நிய தேசத்தில் பாடுவது எப்படியோ)-2 என்ன சொல்லிப் பாடுவது மங்கள கீதங்களை -2
எருசலேம் நகரமே நான் உன்னை மறந்திட்டால் எந்தன் வலதுகை தன் தோளில் மறக்கட்டும் மகிழ்ச்சியினால் மறதியினாலும் உன்னை அதிகமாய் எண்ணாமல் போனால்-2 எந்த நாவு ஒட்டிக்கொள்ளும் பேசாத போகும் -2
பொல்லாத மனிதருக்கு எங்களை தப்புவியும் கொடுமை உள்ளவனுக்கு எங்களை விலக்கிடும் சத்து இருக்கும் முன்பாக பந்தியை ஏற்படுத்தி என் தலையை எண்ணெயால் அபிஷேகம் செய்து -2 கண்மணிபோல் காத்திடுவார் நித்திய நித்தியமாய் -2