ஓய்வு நாளின் ஆசரிப்பை
oyvu naalin aasarippai
ஓய்வு நாளின் ஆசரிப்பை உண்மையாய்க் கொள்வோம் (2) கன நன்மையைப் பெறுவோம்.
1. ஆதிபரன் சொன்னதிது அநீதம் நாம் செய்யலாமோ? பாவிகளும் சீரடையப் பாதையிதுவே பாதையிதுவே பரன் வேதம் மிதுவே.
2. ஆறு நாளும் வேலை செய்து ஏழாம் நாளில் ஓய்ந்திருப்போம் ஓய்ந்திருக்கும் நாளைத் தேவன் உரைத்து வைத்தாரே உரைத்து வைத்தாரே அசீர்வதித்து வைத்தாரே.
3. வாக்கியத்தில் சொன்னபடி வந்துதித்த மீந்த சபை சத்தியத்தை உரைக்க வந்த சாட்சி இதுவே சாட்சி இதுவே மிகு மாட்சி இதவே.
4. தேவன் சொன்ன ஓய்வுநாளைத் திட்ட முடன் மகிழ்ச்சியாக ஆசரிப்போம் ஓய்ந்து நாமும் ஆனந்தம் கொள்வோம் ஆனந்தம் கொள்வோம் பரமானந்தம் கொள்வோம்.