ஓய்வு நாள் பள்ளிக்கூடமே தேவ சேயர்கள்
oyvu naal pallikkoodamae deva seyargal
ஓய்வு நாள் பள்ளிக்கூடமே தேவ சேயர்கள் கூடி மகிழ்ந்தாடி உவந்திடும் நல்.
1. ஆறு நாள் சிருஷ்டிகளை நேருடன் சிருஷ்டித்துத் தீர்த்தோய்ந்திருந்த கர்த்தர் நாமத்தைப் போற்றி நிற்கும்.
2. பாரிலுள்ள மாந்தர் யாவரும் ஆறுநாளின் வேலைகளைத் தீர்த்து இளைப்பாற வென்றும் கர்த்தர் அருளிச் செய்த.
3. சிறுவர் சிறுமியரும் வாலிபரும் முதியோரும் தேவ திரு வார்த்தைகளைச் சிந்தித்துணரச் செய்யும்.
4. கெட்டுப்போன ஆத்துமாக்கள் கிட்டி வந்தேசுவைச் சேர திட்டமுடன் வேலை செய்யப் பெற்றதோர் நல்லிடம்.
5. தேவ ராஜ்யத்திற்கென்று ஆவலோடு எதிர் பார்த்து தேவனின் அருளைப் பெற்று நீடூழி வாழச் செய்யும்.
6. ஏழாம்நாள் சபை இன்றும் எங்கும் பெருகிவர மங்கா நல்லொளி வீச நீங்காத மெய்யான.
7. கர்த்தரின் கிருபைகளை நித்ய காலமே சிந்திக்க சத்தியத்தினாலே தேவ சித்தம் அறியச் செய்யும்.