ஒவ்வொரு பகிர்வும் புனித
ovvoru pagirvum punidha
ஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் ஒவ்வொரு பலியும் புனித வெள்ளியாம் ஒவ்வொரு பணியும் உயிர்ப்பின் ஞாயிறாம் ஒவ்வொரு மனிதரும் இன்னொரு இயேசுவாம்
அந்த இயேசுவை உணவாய் உணர்போம் இந்தப் பாரினில் அவராய் வாழ்வோம்
இருப்பதைப் பகிர்வதில் பெறுகின்ற இன்பம் எதிலும் இல்லையே இழப்பதை வாழ்வென ஏற்றிடும் இலட்சியம் இறுதியில் வெல்லுமே வீதியில் வாடும் நேரிய மனங்கள் நீதியில் நிலைத்திடுமே நமை இழப்போம் பின்பு உயிர்ப்போம்நாளைய உலகின் விடியலாகவே
பாதங்கள் கழுவிய பணிவிடைச் செயலே வேதமாய் ஆனதே புரட்சியை ஒடுக்கிய சிலுவைக் கொலையே புனிதமாய் நிலைத்ததே இயேசுவின் பலியும் இறப்பும் உயிர்ப்பும் இறையன்பின் சாட்சிகளே இதை உணர்வோம் நமைப் பகிர்வோம் இயேசுவின் கொள்கைகள் நம்மில் வாழவே