ஓசன்னா தாவீதின் புதல்வா
osannaa thaaveedhin pudhalvaa
ஓசன்னா தாவீதின் புதல்வா ஓசன்னா ஓசன்னா ஓசன்னா
1. ஆயிரக்கணக்கான வருடங்களாய் எம் ஆண்டவரே உம்மை எதிர்பார்த்தோம் இஸ்ரவேல் ஜனங்களை ஆளவரும் என் இயேசு இரட்சகரே எழுந்தருளும்
2. மாமரி வயிற்றில் பிறந்தவர் மா யோசேப்பின் கரங்களில் வளர்ந்தவரே மானிட குலத்தில் உதித்தவரே எம் மன்னவரே எழுந்தருள்வீர்
3. கானான் மணத்திற்கு அழைக்கப்பட்டீர் அங்கு கலங்கினவர் பேரில் இரக்கப்பட்டீர் கொண்டு வரச் சொன்னீர் சுத்தத் தண்ணீர் - அதை நற்கந்த ரசமாக்கிப் பருகச் செய்தீர்
4.. குருடர் அநேகர் ஒளி பெற்றார் முடம் கூன், செவிடர் பலர் சுகம் பெற்றார் குஷ்டர் அநேகர் நலம் பெற்றார் எம் கடவுள் எம்மோடு வருவீரே
5. யூதேயா நாட்டின் மகிழ் பெற்றீர் எம் யூத ராஜ என்று முடி பெற்றீர் எருசலேம் நகர்தனில் களிப்புற்றீர் எம் இயேசு இரட்சகரே அரசாள்வீர்