ஓசன்னா பாடுவோம் ஒசன்னா பாடி
osannaa paaduvom osannaa paadi
ஓசன்னா பாடுவோம் ஒசன்னா பாடி மகிழ்வோம் தாவீதின் மைந்தன் தேவகுமாரன் தரணி மீதினில் உதித்தார்
இருள் நீங்கிட உலகில் ஒளி வந்ததே அருள் உருவெடுத்து நம்மை மீட்க வந்ததே ( 2 ) ஆடிடுவோமே பாடிடுவோமே ஆனந்தம் கொள்வோமே ( 2 ) பாலகன் இயேசு பாரினில் வந்தார் பாடி மகிழ்வோமே - ஓசன்னா பாடி மகிழ்வோமே
மரியின் மகவாய் மாந்தர் துயர் போக்கவே மாதேவன் இயேசு உலகில் மனுவுருவெடுத்தார் ( 2 ) முன்னுரைப்படி முன்னனை மீது மழலை உருவிலே தன்னிகரில்லா தேவனுதித்தார் ஆனந்தம் ஆனந்தமே - எந்நாளும் ஆனந்தம் ஆனந்தமே