ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும்
orumuraiyaayinum ummai paarkkanum
ஒருமுறையாயினும் உம்மை பார்க்கணும் உங்க முகத்த எனக்கு நீங்க காட்டணும்
உம் தாசனாம் மோசேக்கு உம் சாயல பார்க்க ஆசை இருந்ததும் வீணாகல உம் கரத்தால் மூடி உம் சாயல தாசன் மோசேக்கு காட்டின பின் சாயல நானும் பார்க்க ஆசைதான் நீங்க காட்டுங்க எனக்குத்தான் உங்க தாசனாய் ஆகதான்
உயரமும் உன்னதமுமான உம் சிங்காசனம் வச்சத பாக்கணும் பரிசுத்த உம்முடைய கூட்டத்த அந்த ஏசாயா நின்னு பார்த்திட்ட தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான் அந்த தரிசனத்த பார்க்கதான் ஆசையாய் இருக்கேன் நான் உங்க பரிசுத்தன் ஆகதான்
வானத்தில் இருந்து இறங்கின ஒளி அது மனுஷனுக்காய் வந்த ஜீவ ஒளி சீஷர்களிடமாய் பேசின மொழி என் காதால கேட்கணும் உங்க ஒலி அதை கேட்கவும் ஆசைதான் உம்மை பார்க்கவும் ஆசைதான் உங்க சீஷனாய் இருக்க தான்