ஒருமனமாய் ஓரிடத்தில்
orumanamaay oridathil
ஒருமனமாய் ஓரிடத்தில் கூடி வந்துள்ளோம் இந்த இடமுழுவதும் மகிமையால் நிரப்பிடுமே- (2)
நிரப்பிடும் நிரப்பிடும் உம் ஆவியாலே நிரப்பிடும் நிரப்பிடும் நிரப்பிடும் உம் வல்லமையால் நிரப்பிடும்-(2)
வரங்களால் நிரப்பிடும் பெலத்தினாலே நிரப்பிடுமே -(2) நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்- (1)
மேல் வீட்டு அறையினில் ஊற்றின அபிஷேகத்தை அக்கினி மயமாக எங்கள் மீது ஊற்றுமே-(2) ஊற்றிடும் ஊற்றிடும் அபிஷேகத்தை ஊற்றிடுமே - (2) நிரப்பிடும்..... வல்லமையால் நிரப்பிடும்-(1)
புது புது பாஷைகள் நாங்கள் இன்னும் பேசணும் பரலோகம் பிறப்பதை அனுதினமும் பார்க்கணும்-(2) பார்க்கணும் பார்க்கணும் தரிசனங்கள் பார்க்கணுமே- (2) நிரப்பிடும்...... வல்லமையால் நிரப்பிடும்-(1)
உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பணும் அசைவுகள் உண்டாகி அறுவடைகள் ( எழுப்புதல்)பெருகணும்-(2) எழும்பணும் எழும்பணும் சேனைகளாய் எழும்பணுமே - (2)
பரவணும் பரவணும் எழுப்புதல் தீ பரவணும் நிரம்பணும் நிரம்பணும் சபைகளெல்லாம் நிரம்பணும்- (2)