ஒருபோதும் விலகிடார்
orubodhum vilagidaar
ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2 வழி காட்டும் தெய்வம் உண்டு விழியற்ற என் வாழ்விலே-2
இருள் யாவும் நீக்கிடுவார் புது வாழ்வு தந்திடுவார்-2
1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும் துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2 ஒருபோதும் விலகிடார் ஒருநாளும் கைவிடார்-2
2.காக்கும் தெய்வம் உண்டெனக்கு கலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2 கரம் பிடித்து நடத்துவார் கண்மணிபோல் காத்திடுவார்-2
3.பெலன் அளிக்கும் தேவன் உண்டு பெலன் அற்ற வேளைகளில்-2 என் கிருபை போதும் என்றீர் தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2
4.வாக்குத்தத்தம் செய்த தேவன் சொன்னதை நிறைவேற்றுவார்-2 நம்மோடிருந்து நடத்துவார் முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும்