ஒரு தாயைப்போல தேற்றுகின்ற
oru thaayaippola thetrugindra
ஒரு தாயைப்போல தேற்றுகின்ற அன்பு நேசரே, ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே நீங்க தான் ஐயா என் ஜீவன் இயேசய்யா -2
1. என் இதயம் என்றுமே கலங்காதையா ஐயா உம்மை நானே என்றும் நம்புவேன் ஐயா-2 கைவிடாத தேவன் நீங்க தான் ஐயா-2 நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா-2
2. தகப்பனும் தாயும் என்னை கைவிட்டாலுமே என்னை கைவிடாத தேவன் நீங்க தான் ஐயா-2 உந்தன் மார்பிலே நானும் சாய்ந்து கொள்ளுவேன்-2 என் மனக் கவலை எல்லாம் நான் உம்மிடம் சொல்வேன்-2
3. நான் அழுதால் உம் கண்கள் கலங்கும் இயேசப்பா உம் இதயம் எனக்காக ஏங்கும் இயேசப்பா-2 தனிமையிலே நான் இருந்தால் துணையாய் இருப்பீர்-2 எப்போதும் என் மேலே நினைவாய் இருப்பீர்-2