ஒரு போதும் உனைப் பிரியா
oru podhum unaip piriyaa
ஒரு போதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்லவேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே - 2 நீங்காத நிழலாக வா இறைவா
உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர்சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் ( 2 ) ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய் உறவொன்று தேடும் பிள்ளை போல் நின்றேன் - - உன்னோடு நான் வாழுவேன்
நீர் தேடும் மான் போல தேடி வந்தேன் நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் ( 2 ) என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம் என் இயேசு நியே என்னுள்ளம் நின்றாய் - நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய் உன்னோடு நான் வாழுவேன்