ஒரு நாளும் உனை மறவாத
oru naalum unai maravaadha
ஒரு நாளும் உனை மறவாத உமைப் பிரியாத வரம் வேண்டுமே
நீரின்றி நான் வாழ முடியாதே ஐயா உன் துணையின்றி வாழ்வது வாழ்வாகுமோ உந்தன் தயவால் நான் சிறப்புடன் புது சிருஷ்டியாக வாழ்ந்திடுவேன்
பல்லவி
அல்லேலுயா -3- ஆராதனை
இந்த மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் என் உள்ளம் அதை அறிந்தவர் நீரே என்னை அறிந்த தெய்வம் நீரே ஐயா என்னை புரிந்து கொண்ட தெய்வம் நீரே ஐயா
பல்லவி
அல்லேலுயா -3- ஆராதனை
ஊரும் உறவும் என்னை வெறுத்தே என் உள்ளம் நொந்து சோகமானது என் உள்ளம் அறிந்து ஓடிவந்தீரே என்னை அள்ளி அணைத்துக் கொண்டீரே
பல்லவி
அல்லேலுயா -3- ஆராதனை
மாறாத தெய்வம் நீரே ஐயா - ஒரு மாசில்லா வரம் நீரே ஐயா மகிமை நிறைந்த மன்னவரே மனதை கவர்ந்த என் நாயகரே
பல்லவி
அல்லேலுயா -3- ஆராதனை