ஒரு நாளும் என்னை
oru naalum ennai
ஒரு நாளும் என்னை மறவாமலே உம் கிருபை தாங்குதே (2) உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்துள்ளீர் (2)
தந்தையும் நீரே என் தேவனே தாயும் நீரல்லவோ இருந்த அன்பெல்லாம் இழந்தேனே தஞ்சம் நீரல்லவோ (2) - ஒரு நாளும்
காத்துக் கொண்டீர் என்னை அணைத்துக் கொண்டீர் உம் அன்பினால் நிறைத்தீர் நான் கேட்கும் முன்னே என் உள்ளம் அறிந்தீர் ஏக்கம் நிறைவேற்றினீர் (2) -ஒரு நாளும்