ஒரு முறை ஒரு விசை என்னை
oru murai oru visai ennai
ஒரு முறை ஒரு விசை என்னை தூக்கி நீர் நிறுத்திடும் இதுவரை இழைத்திட்ட பிழைகள் யாவையும் போக்கிடும் கலங்கின நேரங்களில் யாருமில்லையே! கண்ணீரை துடைத்திட நாதியில்லையே! அன்பே! உயிரே! அன்பே! உறவே!
1. அழகான தந்தை நீரே! அன்பாக நடத்தினீரே உம்மைவிட்டு தூரம் சென்றேன் உம்மை மறந்தேனே உதவாதவன் என்று எண்ணவில்லையே இவன் தான் வேண்டுமென்று என்னை அழைத்தீரே அதை நான் மறப்பேனோ? மறந்தால் பிழைப்பேனோ? உம்மை விடுவேனோ? தூரம் போவேனோ?
2. நொறுங்குண்ட இதயம் தாரும் நெருங்கி நான் உம்மை சேர்வேன் உம்பாதம் வீழ்ந்து நானும் புது பெலன் தரித்துக் கொள்வேன். வல்லமையாக ஊழியம் செய்வேன் உம் நாமம் எங்கும் பறைச்சாற்றுவேன். உம்மைப் போலவே நானும் மாறுவேன் என்னை மறைத்து நான் உம்மை காண்பிப்பேன்
3. எத்தனை உயரம் சென்று உச்சம் நான் அடைந் திட்டாலும் உத்தம ஊழியனாய் உம் புகழை தேடனும் என் மகிமைக்கென்றும் நான் சாகனும்! உம் மகிமை ஒன்றே நான் நாடனும்! உந்தன் பிரியமாய் நானும் வாழனும் உந்தன் சித்தமே நாளும் செய்யனும். அன்பே! உயிரே! அன்பே! உறவே!