ஒரு கோடிப்பாடல்கள்
oru kodippaadalgal
ஒரு கோடிப்பாடல்கள் நான் பாடுவேன் – அதைப் பாமாலையாக நான் சூடுவேன் உலகெல்லாம் நற்செய்தி நானாகுவேன் – உந்தன் புகழ்ப்பாடி புகழ்ப்பாடி நான் வாழுவேன்
1. இளங்காலைப் பொழுதுந்தன் துதிபாடுதே – அங்கு விரிகின்ற மலர் உந்தன் புகழ்பாடுதே (2) அலை ஓயாக் கடல் உந்தன் கருணை மனம் – வந்து கரை சேரும் நுரை யாவும் கவிதைச் சரம் (2) – ஆதியும்…
ஆதியும் நீயே அந்தமும் நீயே பாடுகிறேன் உனை இயேசுவே அன்னையும் நீயே தந்தையும் நீயே போற்றுகிறேன் உனை இயேசுவே
2. மனவீணை தனை இன்று நீ மீட்டினாய் – அதில் மலர்பாக்கள் பலகோடி உருவாக்கினாய் (2) என் வாழ்வும் ஒரு பாடல் இசை வேந்தனே – அதில் எழும் ராகம் எல்லாம் உன் புகழ் பாடுதே (2)