ஓர் நல்ல நண்பரைக் கண்டேன்
or nalla nanbaraik kanden
1. ஓர் நல்ல நண்பரைக் கண்டேன் அனாதி நேசராக பேரன்பினாலே இழுத்தார் தம்மண்டை தயவாக அவ்வன்பினால் என் உள்ளத்தைத் தம் வசமாக்கினாரே நான் அவர் சொந்தம் எந்தனை என்றென்றும் ஆட்கொண்டாரே.
2. ஓர் நல்ல நண்பரைக் கண்டேன் மரித்து என்னை மீட்டார். என் ஜீவன் காக்கத் தம்மையே பூராவாய்த் தந்து விட்டார். என் சொந்தமல்ல ஒன்றுமே ரூடவ்ந்தோர்க்கே சொந்தமாக என் ஜீவன் சுகம் யாவுமே படைப்பேன் என்றுமாக.
3. ஓர் நல்ல நண்பரைக் கண்டேன் மா பாசமுள்ள அன்பர் பலத்த வழித்துணைவர் மெய் ஞானமுள்ள நண்பர் இந்நேசர் அன்பை விட்டிதோ! நீக்காது என்னை ஒன்றும் சாவோ? பாடோ? பாதாளமோ? நான் அவர் சொந்தம் என்றுமே.