ஓர் அழகான நட்சத்திரம்
or azhagaana natsathiram
1. ஓர் அழகான நட்சத்திரம் விண் ஜோதியை வீசித் தோன்றிற்று யேசு பிறந்த இடத்துக்கு ஞானிகளுக்கு முன் சென்றது.
பல்லவி
ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது.
2. சத்ய வேதத்தில் அறிந்தனர் நட்சத்திரம் தோன்றும் காலத்தை அதின் ஒளியில் நடந்தனர் யேசு மெய்யான விடிவெள்ளி.
பல்லவி
ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது.
3. ஞானிகளைப் போல் நாம் பின் செல்வோம் மெய்யான ஒளியாம் யேசுவை அவர் ஒளியில் பின் செல்வோம் மோட்ச வீடு சேருமட்டும்.
பல்லவி
ஆழகான நட்சத்திரம்! இன்றும் ப்ரகாசிக்கின்றது இரட்சணிய சுவிசேஷம் இன்றும் ப்ரகாசிக்கின்றது.