ஒப்பிட முடியாத தெய்வமே
oppida mudiyaadha theyvamae
ஒப்பிட முடியாத தெய்வமே உயர்ந்த அடைக்கலமே – 2 நீரே என் தெய்வம் நீரே என் சொந்தம் நீரே என் பந்தம் நீரே என் எல்லாம் – ஒப்பிட உம்மைப் போல் வேறே தெய்வம் இல்லை உயிரோடு எழுந்தவரே – 2 – நீரே
என் மேலே உம் பரிதாபங்கள் என்னை காத்திடுதே – 2 – நீரே
மனம் மாற நீர் ஒரு மனுஷனல்ல தேவனாய் இருக்கின்றீரே – 2 – நீரே
நித்திய விவாகத்திற்கென்று நியமித்துக் கொண்டவரே – 2 – நீரே
அரசாள என்னை அழைத்தவரே அன்பால் இழுத்தவரே – 2 – நீரே