ஊழியத்திற்கு தெரிந்து
oozhiyathirku therindhu
ஊழியத்திற்கு தெரிந்து கொண்டீர் தேவா - என்னை உண்மையுள்ளவன் என்று அழைத்தீர் தேவா உலக வாழ்விலே ஒவ்வொரு நாளும் உம்மை நோக்கி நான் சென்றிட வேண்டும்
1. அழிந்து போகும் ஆத்துமாக்கள் மனம் திரும்பிட அழுது தினமும் விழித்திருந்து ஜெபித்திட வேண்டும் ஜெபித்திட வேண்டும் திறப்பில் நின்றிட வேண்டும்
2.விசுவாச மக்களெல்லாம் நலமுடன் வாழ விசுவாச வீரனாய் ஜெபித்திட வேண்டும் ஜெபித்திட வேண்டும் பாதம் அமர்ந்திட வேண்டும்
3.இலாபமாக இருப்பவைகள் இயேசுவுக்காகவே நஷ்டமென்று எண்ணி தினமும் வாழ்ந்திட வேண்டும் வாழ்ந்திட வேண்டும் உம்மை வணங்கிட வேண்டும்
4.சீசன் என்ற நாமத்தினால் ஜீவனை வெறுக்கணும் சிலுவை சுமந்து இயேசுவை பின்செல்ல வேண்டும் ஜீவனை வெறுக்கனும் உலக இன்பத்தை மறக்கனும்
5.சோதனையும் பாடுகளும் சகித்து செல்லனும் சாத்தானின் கிரியைகளை மிதித்து செல்லனும் மிதித்து செல்லனும் சாத்தானை ஜெயித்து செல்லனும்
6.கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு நான்கு திசையிலும் இயேசுவின் சுவிசேஷம் சொல்லிட வேண்டும் சொல்லிட வேண்டும் சாட்சியாய் வாழ்ந்திட வேண்டும் (இயேசு பெரியவரென்று)