ஊழியர்க்கோர் இடமுண்டு தேவ திராட்சைத்
oozhiyarkkor idamundu deva thiraatsaith
1. ஊழியர்க்கோர் இடமுண்டு தேவ திராட்சைத் தோட்டத்தில் மனமொத்த பெலத்தோடு நாம் துணிவோம் ஊழியத்தில் பாரம் நெஞ்சம் திரளதால் நாமியன்றதை செய்வோம் பாதுகாத்து கூட்டிச் செல்வோம் நீதி வழி காட்டுவோம்
ஓரிடம் நான் அதைக்காண்பேன் அங்கென் சேவை ஸ்தாபிப்பேன் தாழ்வானாலும் உயர்வானாலும் நான் விரும்பி கைக்கொள்வேன் அன்பு தயை என் ஜனத்தில் காட்ட நீர் உதவுமேன் ஆ! தேவா என்னில் தங்குமே இந்த நேரம் முதலாய்
2. உபாத்திமார்க்கோர் இடமுண்டு தெய்வப் பயிற்சி சாலையில் அங்கு நம் குணம் ருசிக்கும் பொன்விதி போதிப்பதால் ராஜ சேவைக்கோர் அழைப்பு அங்குழைத்து ஜெயிப்போம் நாமும் சென்று போதிப்போம் மாந்தர்க்கே நல் ரட்சிப்பை
3. கிறிஸ்தவர்க்கோர் இடமுண்டு நாமியங்கும் சபையில் அதன் முறையில் நடந்து நம் கடமையைச் செய்வோம் பாரச் சுமை உயர்த்தவும் துக்க நிறை உள்ளத்தை பாரம் நீங்க துணை செய்வோம் ஆறுதலை அருள்வோம்