ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரே
oozhiyam seyvom naam deva oozhiyarae
1. ஊழியம் செய்வோம் நாம் தேவ ஊழியரே செல்லுவோம் இயேசுநாதர் நற்பாதையிலே மிக்க ஞானத்தால் வழி நடத்துவார் வல்ல ஆவியின் அருளால் நடத்துவார்.
உழைத்தே .... உழைத்தே விழித்தும் .... ஜெபித்தும் நம்புவோம் .... உழைப்போம் நம் இயேசு வருமளவும்
2. உழைப்போம் உழைப்போம் சுவிசேஷகரே காட்டுவோம் தெளிவாய் ஜீவ மார்க்கத்தையே சிலுவை சுமந்தோர் மகிமை அடைவோம் கூறுவோம் ரட்சிப்பு தேவ ரூடவ்வு என்றே. - உழைத்தே
3. உழைப்போம் உழைப்போம் விசுவாசிகளே இருளின் அஸ்திபாரங்கள் நொறுங்கவே இயேசுவின் நாமம் உலகெங்கும் ஓங்கவே கூறுவோம் ரட்சிப்பு தேவ ரூடவ்வு என்றே. - உழைத்தே
4. உழைப்போம் உழைப்போம் முடிவு வரைக்கும் அறுவடையே ஆனந்தம் அடைவோம் அந்த ராஜ்ஜியத்தின் ஜோதி தோன்றும் வரை கூறுவோம் ரட்சிப்பு தேவ தயவு என்றே. - உழைத்தே