ஊற்றுத் தண்ணீரே பொங்கி
ootruth thanneerae pongi
1. ஊற்றுத் தண்ணீரே பொங்கிவா பொங்கிவா ஊள்ளத்தினின்றோடும் நதியாய் வா ஊம்மிலுண்டே எங்கள் ஊற்றுகளெல்லாமே ஊற்றிடும் ஆவி என்று பாடுவோம்
எழுப்புதல் அடைந்து எழும்பிடுவோம் கழுகு போல் பறந்து உயர்ந்திடுவோம் புது பெலனை நாம் பெற்றிடுவோம் புதுப்பித்து ஆவியில் அகமகிழ்வோம்
2. பாவ சாபங்கள் நோய்களும் நீங்கியே ஆவியாலே சுத்தமாகிடவே வல்ல அபிஷேகம் பலமாயிறங்க பொல்லாங்கன் நுகம் முற்றும் முறியும் - எழுப்புதல்
3. வனாந்தர வாழ்க்கையும் செழிக்கும் வான் திறந்து பின்மாரி ஊற்றிட அளவில்லா தேவ அன்பினில் மூழ்கியே ஆவியின் கனியையும் கொடுப்போம் - எழுப்புதல்
4. பற்றியெரியும் அக்கினி சோதனை சுற்றியே நெருங்கி வந்திடினும் அக்கினியின் ஆவி வல்லமை பெறவே ஆகிடும் எல்லாம் ஜெயமாகவே - எழுப்புதல்
5. மரித்தோரையும் எழுப்பும் வல்லமை மரண சரீரம் மாற்றிடுமே நிறைந்திடுவோமே ஆனந்த தைலத்தால் விரைந்து அவர் முகம் காணவே - எழுப்புதல்