ஊற்றும் ஊற்றும் உன்னத
ootrum ootrum unnadha
ஊற்றும் ஊற்றும் உன்னத ஆவியால் உன்னத அனுபவம் நிறைவைத்தாருமே - 2 உலர்ந்த என்னையும் உயிர்ப்பித்து அருளும்- 2 ஊற்று தண்ணீரே பொங்கிவாருமே - 2
போதாது போதாது கணுக்கால் அளவு போதாது போதாது முழங்கால் அளவு போதாது போதாது இடுப்பின் அளவு வேண்டும் வேண்டும் நீச்சல் ஆழமே - 2
1. வானம் திறக்கணும் வல்லமை இறங்கணும் வல்லவர் வல்லமையை நிருபித்து காட்டணும் - 2 வாக்கு கொடுத்தீரே வல்லமையை தெய்வமே - 2 வரங்களால் என்னை நிறைத்திடும் - 2
2. கன்மலை பிளக்கணும் தாகம் தீரணும் கதறி அழுவோரின் கதறல் நீங்கணும் - 2 கட்டுகள் உடையணும் கலக்கம் தீரணும் - 2 கர்த்தர் தெய்வம் என்று ராஜாக்கள் அறியணும் - 2
3. மேகம் இறங்கணும் பெருமழை பொய்யணும் தேசத்தின் வறட்சி எல்லாம் செழிப்பாய் மாறணும் - 2 துதியின் சேனைகள் எங்கும் எழும்பணும் - 2 தேவனின் மகிமையால் தேசங்கள் நிறையணும் - 2