ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே
ootrum ootrum ootrumae
ஊற்றும் ஊற்றும் ஊற்றுமே உன்னதத்தின் ஆவியை ஊற்றுமே நிரப்பும் நிரப்பும் நிரப்புமே என் பாத்திரம் வழிந்திட நிரப்புமே
பெந்தேகோஸ்தே அனுபவம் வேண்டுமே ஒருமனதோடு துதிக்கிறோம் அந்தகார வல்லமைகள் அகன்றிட அக்கினியின் நாவுகள் ஊற்றுமே பாதாள சங்கிலிகள் அறுந்திட பரிசுத்த ஆவியை ஊற்றுமே
வானத்தை திறந்து ஊற்றுமே வரங்களாலே நிரப்புமே அந்நிய பாஷைகள் பேசிட ஆவியில் அனல் கொண்டு எழும்பிட
அக்கினி அபிஷேகம் வேண்டுமே அற்புதம் திரளாய் நடந்திட உலர்ந்த எலும்புகள் உயிர்த்திட உலகமே உண்மை துதித்திட
புயல் காற்றால் என்னில் நீர் வாருமே பெரும் மழையை என்னுள் நீர் தாருமே