ஊற்றும் அபிஷேகம்
ootrum abishegam
ஊற்றும் அபிஷேகம் ஆவியின் அபிஷேகம் இப்போ இவ்வேளையிலே காட்டும் பரலோகம் உன்னத காட்சிகள் இங்கே இந்நேரத்திலே-ஆமென் ஆமென்
அப்போஸ்தலர்கள் மேல் வந்து அமர்ந்த நல் அக்கினி நாவுகள் இக்கூட்ட மத்தியில் ஈவு அனுப்புமே பரிசுத்தமானவரே - உன்னதமானவரே
பல பாஷை பேசட்டும் வரங்களை காணட்டும் இங்கே இந்நேரத்திலே பரனோடு வாழட்டும் பரிசுத்தம் ஆகட்டும் பாவங்கள் ஓடட்டுமே
கர்த்தாதி கர்த்தனே தேவாதி தேவனே அற்புதம் செய்பவரே உந்தன் ஊழியம் உண்மையாக செய்திட கிருபை தந்திடுமே