ஒன்றுமில்லை நான்
ondrumillai naan
ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை என்னில் ஏதுமில்லை ஏனோ என்னைத்தேடி வந்தீர் உம் அன்பு பெரியது
1. பாவத்தில் மூழ்கியிருந்தேன் சாபத்தில் வாழ்ந்து வந்தேன் – 2 கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி கழுவி அணைத்தீரே – 2
2. ஒன்றுக்கும் உதவாதென்னை உருவாக்கி உயர்த்துகிறீர் – 2 அன்பே என்றீர் மகனே என்றீர் ஆவியை ஊற்றிவிட்டீர் – 2
3. உம் அன்பை சொல்லிடவே அழைத்தீரே உம் சேவைக்கு – 2 அனுதினம் நினைத்து ஆகாரம் தந்து அடைக்கலமானீரைய்யா – 2