ஒன்றுமில்லாமையில்
ondrumillaamaiyil
ஒன்றுமில்லாமையில் இருந்தெம்மை உயர்த்தின உம் அன்பை நினைக்கையிலே உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே-2
நீர் எங்களை நேசிக்க நாங்கள் எம்மாத்திரம் எங்களை நீர் நினைவுகூர நாங்கள் பாத்திரர் அல்லவே-2
வியாகுல வேளைகளில் நீர் எங்கள் ஆறுதலே பாரங்கள் நிறைந்த நேரம் நீர் எங்களை தாங்குகிறீர்-2-நீர் எங்களை
தலைமுறை தலைமுறையாய் நினைவுகூர்பவரே தாங்கியே நடத்திடும் உம் தயவை மறப்பேனோ-2-நீர் எங்களை
வழிகாட்டும் தெய்வமே இருளான நேரங்களில் தடுமாறும் நேரங்களில் தாங்கிடும் தயாபரரே-2-நீர் எங்களை