ஒன்றும் இல்லாத நிலமையிலே
ondrum illaadha nilamaiyilae
ஒன்றும் இல்லாத நிலமையிலே சகலமும் படைத்தவர் நம் தேவன் அவரே தேவன் அவரே தேவன்-2 யேகோவா நம் தேவன்
பஞ்சத்தால் உள்ளம் சோர்ந்து போனாலும் கோதுமை மணிகள் அற்றுப்போனாலும் எலிசாவின் தேவன் நம்மோடு உண்டு எண்ணிலடங்கா நன்மை செய்திடுவார் -2
எதிரியின் கூட்டம் சூழ்ந்து கொண்டாலும் எல்லாமே நம்மை விட்டு போனாலும் தாவீதின் தேவன் நம்மோடு உண்டு-2 ஜெயத்தின் மேல் ஜெயமே தந்திடுவாரே
சாத்தானின் சூழ்ச்சிகள் சுற்றி கொண்டாலும் செல்வமும் சொந்தமும் விட்டு போனாலும் யோபுவின் தேவன் நம்மோடு உண்டு இரட்டத்தனையாய் பலன் தருவார்_2