ஒன்றை நான் செய்வேன்
ondrai naan seyven
ஒன்றை நான் செய்வேன் - அதை என்றுமே செய்வேன் - என் இயேசுவுக்காய் தொண்டு செய்வேன் எந்தன் நம்பிக்கை இயேசு ராஜா மீதிலே அவர் காட்டும் இலக்கிலே எந்தன் ஓட்டம்
1. அழிந்து விடும் உலகத்தை ஆதாயம் செய்ய சிலுவையின் நிழலின் கீழ் கொண்டு சேர்த்திட பாரமான யாவையும் நான் பின்னால் எறிந்தது பார சிலுவையை தூக்கி எந்தன் ஓட்டம்
2. சிலுவையை சுமந்து நான் சேவை செய்திட சிலரை தேவனிடத்தில் கொண்டு சேர்த்திட ஜீவ தேவன் அடிகளை பின்னே தொடர்ந்து சேவிப்பேன் காலமெல்லாம் எந்தன் இயேசுவை
3. சிலுவையில் அறையுண்ட கிறிஸ்துவுடனே ஜீவிப்பது நானல்ல கிறிஸ்து என்னில் நிந்தைகளை சகித்து நேர்மையுடன் நித்திய ராஜ்ஜியம் நோக்கி எந்தன் ஓட்டம்
4. வரப்போகும் இரட்சகரை வானில் சந்திக்க வாழும் இந்த லோகமதில் மானிடர்கள் வாழும் வழி யாவும் கூறி சிலுவையின் கீழ் வாழ்க்கை வழிகாட்டி என்று முன்னே செல்வேன்