ஒன்றே என் வாஞ்சை
ondrae en vaanjai
ஒன்றே என் வாஞ்சை பரனே என்று உமது திரு சாயல் காண்பேனோ! வென்றார் இயேசுவே அன்பாலே என்னை
1. உமதாலயந்தனின் திருப்பாத பீடத்தில் இதமா என் வாழ்நாளெல்லாம் - வந்தேன் அகமெல்லாம் அருள் பொங்கும் விலையேறும் நின் திவ்ய முகங்காண ஆசிக்கிறேன் - ஒன்றே
2. வறண்டே விடாய்த்துமே தண்ணீரில்லாத இவ் உவர் நிலமாம் உலகில் - எந்தன் தேகமும் ஆத்மாவும் ஏகமாயும்மீதில் தாகம் கொண்டேங்கிடுதே - ஒன்றே
3. உமது முகத்தையும் உமது கிருபையும் உமது மே வல்லமையும் - கண்டே கலி நீங்கு மகிமையால் என் உள்ளம் பொங்கியே கவி பாட நாடிடுதே - ஒன்றே
4. பரலோகில் யாருண்டு இகலோகில் நீரொன்றே பரிந்தன்பு கூர்ந்திடவே - நானும் இணைந்தொன்றாய் உம்மோடே இனியும் கிட்டி சேர துணை செய்வீர் தேவாவியே - ஒன்றே
5. திருச்சித்தம் செய்ததோர் இணையில் மனுவேலா இருப்பீரோ அந்தியம் வரை - என்னை வழுவாமல் நடத்தியே நிறுத்தும் நீரும்மன்பில் பழுதற்றோனாயும் முன்பு - ஒன்றே