ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
oliyaanavaa uyiraanavaa mannavan neeyae
ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே ஒன்றானவா உருவானவா நின்மலர் பதத்தினில் எனை மறந்து உனை அடைந்து எழில் அடைந்து பாடுகின்றேன் - - -
உனக்காக என் ஜீவன் உயிர் வாழுது உலகில் நான் உனைக் காணத் துடிக்கின்றது ( 2 ) உன் பார்வை நிதம் காண மனம் ஏங்குது - 2 நாளும் பொழுதும் நீ என்னில் மலர் நானிலம் எங்கும் நின்மணம் கமழ உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன்
2 . உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது உறவில் உன் உறவே சுகமானது ( 2 ) உன் நெஞ்சம் எனக்கென்றும் மடியானது நீயே தானே நினைவினில் மலர நின் உயிர் தானே எனில் என்றும் வளர உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனை மறந்து பாடுகின்றேன