ஓடி வாராயோ நண்பா
odi vaaraayo nanbaa
ஓடி வாராயோ நண்பா என் நேசர் அழைக்கிறார் இன்று இன்றே திரும்புவாய் கண்டு
1. ஆழ்ந்த கடலில் அமிழும் போது அணைத்துக் காப்பதும் அவர் கரம் அன்பின் குரல் பெயரை அழைத்து தாவி அழைப்பதும் அவர் கரம்
2. கள்ளமற்ற அன்பு வார்த்தை காத்துக் கொள்வது அவர் கரம் ஒன்றும் இல்லாத தூசி நம்மை உயர்த்துவதும் அவர் கரம் - ஓடி
3. சீறும் புயலின் தீமை நின்றே மறைத்துக் காப்பதும் அவர் கரம் பாதை மாறிய கால்களுக்கு தீபம் காட்டும் அவர் கரம் - ஓடி
4. உற்ற உறவும் கைவிட்டாலும் உரிமை கொள்ளும் அவர் கரம் உண்மை அறிவும் சிறந்த ஞானமும் ஏந்தி தருவதும் அவர் கரம்
5. எங்கு பார்த்தாலும் காயம் தோய்ந்த ஒளியின் கரங்கள் காணுதே ஓடி வந்து பலத்த மார்பில் சாய்ந்து கொள்ள மாட்டாயோ