ஓ யேசுவே என் மீட்பர்
o yesuvae en meetpar
1. ஓ யேசுவே என் மீட்பர் இன்ப கீதம் நீரே துக்கம் என்னைச் சூழ்கையில் என் ரட்சகர் நீரே.
ஓ யேசுவே என் மீட்பர் உம்மையே போற்றுவேன் நீரே என் மாறா நண்பர் என் அன்பின் தோழர் நீர்.
2. கஷ்டமான காலத்தில் நீரே என் ஆறுதல் கண்ணீர் சிந்தி நிற்கையில் நீரே என் நம்பிக்கை.
3. ரட்சகரை நம்புவேன் என் நல் வழிகாட்டி என் பாசம் அவரில் தான் உலகம் யாவிலும்.
4. இப்பாவ உலகில் என் ஆத்ம சந்தோஷம் நீர் பரலோக வீட்டிலும் என் மகிழ்ச்சி நீரே.