ஓ ஸ்திரி வித்
o sthiri vith
ஓ ஸ்திரி வித் தேசையா அன்பு கூராய் துன்பம் தீராயோ
வஸ்தோரே கிறிஸ்துவேதா மானுவேலே யேசுநாதா வந்தெமை க்ருபைக் கண் பாராயோ
1.ஆதி மானிடர் புரிந்த பாததம் தொலைக்க வந்த அண்ணலே உமக் கபயமே ஓ ஸ்திரி வித்தேசையா ஆதரித் திரங்க வேண்டுமே - ஓ
2.எத்தனை மனக்கிலேசம், நித்தமும் சத்துருக்கள் மோசம் எந்தையே கைவிட்டு விடாதேயும் ஓ ஸ்திரி வித்தேசையா எப்படியும் காத்தருள் மெய்யா - ஓ
3.ஆடுகள் சிதறிப்போச்சோ அன்னியருக் கிஷ்டம் ஆச்சோ பாடுபட்ட பட்சக் கோனாரே ஓ ஸ்திரி வித்தேசையா காடுகளில் தேடிப் பாருமேன் - ஓ
4.மந்தையைக் க்ருபை கண்பாரும் சிந்தையில் துயரம் தீரும் சந்ததம் தொழுவம் சேருமேன் ஓ ஸ்திரி வித்தேசையா வந்தனம் உமக்கு ஸ்தோத்திரமே - ஓ