ஓ ஓய்வு சுபதினம் மனமகிழ்ச்சி நாள்
o oyvu subadhinam manamagizhcchi naal
1. ஓ! ஓய்வு சுபதினம் மனமகிழ்ச்சி நாள் ஓ! ஆதிசய தைலம் காலை மாற்றும் நாள் உன்னில் பக்தர்கள் கூடி கர்த்தரைத் தொழவே தூய! தூய! தூயென போற்றிப் பாடிடவே.
2. நீ ஓர் நற்துறைமுகம் எழில் புயல் அற ஓரழகியத் தோட்டம் பரதீஸ் ஊற்றூற வறண்ட ஜீவியத்தை குளிர்ப்பிக்கின்றாயே! ப்யூலாவைக் காட்டுகின்ற பிஸ்காமலை நீயே!
3. இன்பதோர் தியான தினம் நான் ஆசிக்கின்ற நாள் மண்ணினின்று மனதை விண்ணிற்கிழுக்கும் நாள் என்றும் புதுக்கிருபை இந்த நாள் ரூடவ்குதே பொன்னகர் முசிப்பாறல் தேடிடச் செய்குதே!